d tags of your site:
Mon. Jul 22- 2019

வெங்கட்ஜி பக்கம்:அத்திவரதர்-லோக்கல் டைரிக்குறிப்பு

Share This News:

முதல் மூன்று நாட்கள். ஓரளவுக்கு கூட்டம். சராசரி 60-70 ஆயிரம் பேர்..சமாளிக்க முடிந்தது. ஏன்னா ஏற்பாடுகளே அவ்வளவுதான்..

இப்போது தினமும் இரண்டு லட்சம் பேரை நெருங்கு கிறது. கட்டுக்கடங்காத கூட்டம்.. ஆனால், ஒட்டுமொத் த கூட்டமும் கோவில் சுற்றுவட்டாரப் பகுதியிலேயே குவிக்கப்பட்டு திணறடிக்கப்படுகிறது..இது ஏன் என்றே புரியவில்லை..

கூட்டத்தை பரவலாக்கி, எவ்வளவு தூரம் வேண்டு மானாலும் வரிசைகள் போகட்டும். ஆனால் நிம்மதியா தள்ளு முள்ளு இல்லாமல் அச்ச உணர்வு இல்லாமல் பக்தர்களை வரிசையாக செல்ல வைப்பதில் அரசு நிர்வாகம் முற்றிலுமாக தோற்றுப்போய்விட்டது..

விஐபிக்களை மட்டும் கவனித்து அனுப்புவதில் கவனம் செலுத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு அத்தி வரதர் விழா, எதிர் வினையாற்றாமல் போனால் ஆச்சர்யமே..

கடவுள் இல்லவே இல்லை என்று நம்பும் உண்மை யான நாத்தீகர்களை பார்க்கவேண்டுமா, காஞ்சிபுரம் வாருங்கள். கடவுள் பேரை வைத்து காசு பார்த்துக் கொண்டிருப்பார்கள்.. தரிசியுங்கள்…

என் நெய்வேலி தங்கை வந்தார், காலை 4 மணிக்கு இலசவ தரிசன வரிசைக்கு போகச்சொன்னேன். போனவர் ஆறரை மணிக்கு தரிச னம் பார்த்துவிட்டு வந்தார். விடியற்காலை 2 மணி முதல் 4 மணிக்குள் போய்விட் டால், பெரும் தொல்லை யில்லை. இது எவ்வளவு பேருக்கு சாத்தியமோ?

பகலில் தரிசிக்க போனால், அவங்கவுங்க தலையெ ழுத்து எப்படியோ அதன்படியே நடக்கும்…

பலமிருந்தால் வரிசையில் எங்கும் புகமுடியும். போலீசா அப்டின்னா? பலரின் புலம்பல் இதுதான்…

_ஏழுமலை வெங்கடேசன்

#aththivarathar #kanchipuram #ezumalaivengatesan

அதிகம் வாசிக்கப்பட்டவை...  முட்டாள் பெண்கள் திருந்துவது எப்போது..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares