d tags of your site:
Mon. Jul 22- 2019

10-வது உலகத் தமிழ் மாநாடு ஜூலை 4-இல் தொடக்கம்- விழாக் கோலம் பூண்ட சிகாகோ

Share This News:

தமிழின் பெருமை உணர்த்தும் வகையிலான உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்காவில் ஜூலை-4, 2019 நேற்று தொடங்கியது.

இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள், சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர்..

உலகத் தமிழ் மாநாடு ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம், சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து 10ஆவது உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

இந்த மாநாட்டிற்கான மையக்கரு “கீழடி நம் தாய் மடி” என்பதாகும். மதுரையை அடுத்த கீழடியில் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. அவை பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்குகின்றன.

கீழடியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழர்களின் வாழ்க்கையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் சிகாகோவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு, கீழடியை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. மேலும் தமிழறிஞர் ஜி.யு.போப் அவர்களின் 200-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாகவும் அமைந்துள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

  • ஜூலை 4 & 5 – கலை நிகழ்ச்சிகள்
  • ஜூலை 6 & 7 – சர்வதேச அளவிலான தமிழ் கருத்தரங்கம்
  • ஜூலை 6 – உலகத் தமிழ் தொழில் முனைவோர் கூட்டம்
  • ஜூலை 6 மாலை – “சங்கங்களின் சங்கமம்” அணிவகுப்பு & விருந்து நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய நடனங்கள், பட்டிமன்றம்,இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர் மாநாட்டிற்குச் சென்றுள்ளனர்.

இவர்களைத் தவிர சாலமன் பாப்பையா, ஜேம்ஸ் வசந்தன், சீர்காழி சிவசிதம்பரம், சல்மா, ஓவியர் மணியன் செல்வன், எழுத்தாளர்கள் ஸ்டாலின் குணசேகரன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி.மகேந்திரன், நாட்டுப்புறக் கலைஞர்கள் செந்தில்-ராஜலட்சுமி, இளம் இசை மேதை லிடியன் நாகஸ்வரம் இயக்குநர் கரு.பழனியப்பன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ளனர்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதில் சுமார் 2,000 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளன. அவற்றில் இருந்து 80 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு,வாசிக்கப்பட்டு, பின் புத்தகமாக ஆக்கப்படுகிறது.

இதில் கலந்து கொள்ள மன்னார்குடியை அடுத்த எட அன்னவாசல் நாகஸ்வர வித்வான் மணிசங்கர், இசைக்கல்லூரி பேராசிரியர் மற்றும் வயலின் இசைக் கலைஞர் ஜெயந்தி மணிசங்கர், இவர்களது மகள் இளம் தவில் கலைஞர் அமிர்தவர்ஷினி ஆகியோரும் புறப்பட்டு சென்றிருக்கின்றனர்!

அதிகம் வாசிக்கப்பட்டவை...  09-07-2019- செவ்வாய்க்கிழமை-இன்றைய ராசி பலன்கள்

#ckicago #tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares