d tags of your site:
Mon. Jul 22- 2019

இங்கிலாந்து சைக்கிள் அணிக்குக் காசு கொடுத்தால் கூட சைக்கிள்களை விற்க மாட்டோம்-ஏன்..எதற்கு

Share This News:

இங்கிலாந்து சைக்கிள் அணிக்குக் காசு கொடுத்தால் கூட சைக்கிள்களை விற்க மாட்டோம்” என்ற இங்கிலாந்து சைக்கிள் நிறுவனம்!

21-ஆம் நூற்றாண்டு பிறந்தபோது இங்கிலாந்து சைக்கிள் அணி மிகுந்த கேவலம் ஒன்றை சந்தித்தது.

இங்கிலாந்தின் பெரிய சைக்கிள் நிறுவனம் ஒன்று இங்கிலாந்து சைக்கிள் அணிக்கு சைக்கிள்களை விற்கமாட்டோம் என அறிவித்தது. “ஸ்பான்சர் செய்ய மாட்டோம்” என்று கூடச் சொல்லவில்லை; “காசு கொடுத்தால் கூட சைக்கிள்களை விற்கமாட்டோம்” என அறிவித்தது.

காரணம்?

108 ஆண்டுகளாக அவர்கள் வாங்கிய ஒலிம்பிக் மெடல்கள் எண்ணிக்கை ஒன்றே ஒன்று மட்டுமே!

சைக்கிள் பந்தயத்தின் உலகக்கோப்பை எனக் கருதப்படும் டூர்-டி-பிரான்சில் நூறாண்டுகளில் ஒரே ஒரு ஆங்கிலேயர் கூட வெல்லவில்லை.

இவர்கள் நம் சைக்கிளை ஓட்டினால் நம் நிறுவனத்திற்கு தான் கெட்ட பெயர் என அந்த நிறுவனம் சைக்கிள்களை விற்க மறுத்தது.

இந்தக் கேவலத்துக்குப் பின் டேவ் பிரெய்ல்ஸ்போர்டு எனும் டீம் டைரக்டரை நியமித்த போர்டு “அணியைக் கரை சேர்க்க வேண்டும்” என கட்டளை இட்டது.

அவர் பெரியதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. சிறு சிறு மாற்றங்களை மட்டுமே செய்தார். அதிலும் யாரும் இதுவரை செய்யாத சின்ன விஷயங்களில்…

அவர் செய்த முதல் வேலை சைக்கிள் வீரர்களுக்கு நல்ல படுக்கை, தலையணை வாங்கிக் கொடுத்ததுதான். இதைக்கண்டு எல்லோரும் நகைத்தாலும், இதனால் வீரர்களின் உறக்கம் மேம்பட்டது. உறக்கம் மேம்பட்டதும் புத்துணர்வு மேம்பட்டது.

அடுத்து வீரர்கள் கை கழுவும் சோப்பை
மாற்றினார் கோச். இதுவும் நகைப்புக்குள்ளானாலும் இதனால் வீரர்களுக்கு சளி, காய்ச்சல் வரும் விகிதம் குறைந்தது.

சைக்கிள் கிளப், வீரர்கள் பயணிக்கும் வேன் ஆகியவற்றுக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கச் சொன்னார் கோச். எல்லோரும் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என நினைத்தார்கள். ஆனால் வெள்ளை நிறம் இருந்ததால் துளி அழுக்கு இருந்தாலும் பளிச் என தெரிந்து சுத்தம் செய்ய முடிந்தது. வீரர்களுக்கு நோய்த்தொற்று வருவதை இது தடுத்தது.

இப்படி சின்னச் சின்ன விஷயமாக யாருமே கவனிக்காத, அலட்சியப்படுத்திய விஷயங்களைக் கவனித்து மாற்றினார் பிரெல்ஸ்போர்டு. உதாரணமாக சைக்கிள் சக்கரங்களில் ஆல்கஹாலை பூசினார். இதனால் சக்கரங்களின் க்ரிப் மேம்பட்டது. வீரர்களின் உடையை ஆராய்ந்து மாற்றினார். இதனால் காற்றின் ரெசிஸ்டென்ஸ் குறைந்தது.

2008-ஆம் ஆண்டு பீகிங் ஒலிம்பிக்ஸ்..

சைக்கிளிங்கில் 60% தங்க மெடல்களை வாங்கி அசத்தியது ப்ரிட்டிஷ் சைக்கிள் அணி.

ஒட்டுமொத்த உலகமும் அதிர்ந்தது.

அத்துடன் நிற்கவில்லை. அடுத்து 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸ்… அதில் ஒன்பது உலசாதனைகளை நிகழ்த்தியது ப்ரிட்டிஷ் அணி.

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕙 1-நிமிட வாசிப்பு- NEWS BRIEF

அடுத்த ஆறு ஆண்டுகளில் ஐந்து பிரிட்டிஷ் வீரர்கள் டூர்-டி-பிரான்ஸ் விருதை வென்று வரலாற்று சாதனை படைத்தார்கள்.

சைக்கிளை விற்க மறுத்த நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறோம் என ஓடி வந்து கதறியது.

என்ன செய்து இத்தனை பெரிய வெற்றிகளை அடைய முடிந்தது என பார்த்தால் எல்லாமே சின்னச் சின்ன விஷயங்களாக இருந்தன.

ஆனால் சின்ன விஷயங்களை சரியாகச் செய்தால் தான் மிகப்பெரும் வெற்றிகளை அடையமுடியும்!
#நியாண்டர்செல்வன்

#cycle #olimpic #england

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares