d tags of your site:
Tue. Oct 22- 2019

வெங்கட்ஜி பக்கம்: பெரும்பாலான அதிகாரிகள் யோக்கியதை இவ்ளோதான்….கொடுமை..

Share This News:

மாநில அரசாங்கத்தில் போலீசை இங்கே மத்த அரசு துறைகள் மேல பெரிசா எல்லா தரப்பி னருக்கும் இங்கே பயமே கிடையாது..போலீஸ் மேல மட்டும் ஏன் பயம்ன்றது உலகமறிஞ்ச மேட்டரு

அதிலும் முனிசிபல் கமிஷனர், தாசில்தார், ஆர்டிஓ, டிஆர்ஓ, கலெக்டர் அப்புறம் பொதுப்பணி, மின்சாரம், ஹைவேஸ்னு எந்த அதிகாரிமேலயும் சாதாரண சட்ட மீறல் பார்ட்டிக்கு, பச்சையா சொனனா …யிறுக்குகூட மெர்சல் கிடையாது..ஏன்னா அவுங்க யோக்கியதை அப்படி..

இப்போ, மிலிட்டரிகாரன் சுவத்துல கொண்டுபோய் போஸ்டர் ஒட்டுங்க பார்ப்போம், தூக்கிட்டு போய் குமுறுவான். ரயில்வே பொருட்கள் வெட்டவெளியில் சிதறிக்கிடக்கும். ஒரு பய தொடமாட்டான். ஏன்? கேஸ்ல மாட்னா சாகிற வரைக்கும் அலையணும்..

ஆனா இன்னொரு பக்கம் பாருங்க..பத்தாயிரம் ரூபாய் செலவு பண்ணி தெருவோட பேர்ப்பலகையை சூப்பர் டிசைன்ல முனிசிபாலிட்டி வெக்கும். அது மேல கொண்டுபோய், ஒரு போஸ்ட்டர் ஒட்ற பேமானி கூலா, வெள்ளைப்படுதா, துரித ஸ்கலித பிரச்சினையா உடனே அணுகவும்னு நாலைஞ்சி பிட் நோட்டீசை ஒட்டிகிட்டு போய்கிட்டே இருப்பான்..

அந்த பேர்பலகை சம்மந்தப்பட்ட ஆபிஸ் ஊழியர்கள் கூட பார்ப்பாங்க.. ஆனா ரிப்போர்ட் பண்ணவே மாட் டாங்க.. ஆபீசர்ஸ்.. வாவ் அவுங்கள பத்தி கேக்கவே வேணாம்..

பிட் நோட்டீஸை பார்த்து, அது சம்மந்தப்பட்டவனுங் களை தூக்கிட்டு வரவெச்சி, ஆக்சனை காட்டினா, ஒத்துக்கலாம் நம்ம ஆபிசருங்கள..

இதுவரைக்கும் அந்த மாதிரி ஆக்சனை எங்காச்சும் பார்த்திருக்கீங்களா? இதே மாதிரிதான் பளபளன்னு அரசாங்க செலவுல கட்டி திறக்கப்படும் பேருந்து நிழற்குடைகளுக்கும் ரெண்டே வாரத்துல டிசைன் டிசைனா சங்கு ஊதிடுவானுங்க..ஒரு ஆபிசரும் கேக்கமாட்டாங்க..

பல நகரங்கள்ல கோடிக்கணக்கான ரூபா செலவு பண்ணி போட்ட பிளாட் பார்ம்களை பாருங்க. எவன் எப்படி நாசப்படுத்தினாலும், ஒரு ஆபிசரும் ஏன் இன்னான்னு வந்து கேக்கவேமாட்டாங்க.

புதுசா ரோடுபோட்டா, அங்கே போய், தலைவரை வரவேற்கிறோம்னு ரோடு முழுக்க குழிபோட்டு அரசியல் கட்சிக்காரனுங்க கொடி நடுவானுங்க..

தலைவர் போனதும் இரும்பு கம்பி கொடி கம்பங் களை பிடுங்கி எடுத்துகிட்டு போயிடுவாங்க. கொஞ்சம் லேட் பண்ணா எவனா ஒருத்தன் அபேஸ் பண்ணி இரும்பு கடையில போட்டுட்டு பல மாசத்துக்கு தேவையான டாஸ்மாக்குக்கு கியாரண்டி தேத்திக்குவான்.

அதனால, படு உஷாரா தலைவரோட லாஸ்ட் வாக னம் கிராஸ் ஆன ஒடனேயே கொடி கம்பங்களை டேக் பேக் பண்ணிக்குவாங்க. ஆனா ரோடுமட்டும் பொத்தல் கணக்கா சொறி புடிச்சா மாதிரி இருக்கும். கொஞ்ச நாள்ல ஆயிரம் குழி கண்டு ரோடு போட்டதற்கு சுவடே இருக்காது.

அந்த வழியா ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் பார்ட்டிங்க போய் வராமலா இருப்பாங்க. ஆனா பாருங்க ஒருத் தனுக்கும் அதைபார்த்து கோபமோ ரோஷமோ வரவே வராது.. ஹைவேஸ்க்குத்தான் புத்தியில்லைன்னா அந்த டிபார்மெண்ட்டுக்கு பணம் குடுக்குற டிபார்ட் மெண்ட்டுக்கும் சுரணை வராது..

கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் வளாக சுவருங்க, மேம்பாலங்கன்னு அரசாங்க சொத்து மேல, தங்கமே சிங்கமே, அடலேறே, புலியை எட்டி உதைச்சவனே, அனகோண் டாவை அக்குள்ல சுருட்னவனேன்னு மொழ நீளத்துக்கு எல்லா கட்சிக்காரனுங்க, சாதி சங்கங்க பார்ட்டிங்க, அவ்ளோ ஏன், நாலேபேர் கூட இல்லாத லெட்டர் பேட் காரணுங்ககூட பயமே இல்லாம எழுதுவானுங்க.

ஏன்? எந்த அதிகாரிவந்து என்ன புடுங்கிடப்போறான்ற தெனாவட்டுதான். ஏரி, குளம், குட்டைகளை ஆட்டைய போடறவனுங்களையே மொறைக்க மொறைக்க வேடிக்கை பார்ப்பாங்கன்னா, வேறென்னத்தை சொல்றது?

நாம மேல சொன்ன படா படா அதிகாரிகளை பார்க்க அவுங்க ஆபிஸ் போய் பாருங்க,, சார் வரப்போறார் அப்டிக்கா தள்ளிப்போய் நில்லு. இங்கெல்லாம் பேசக்கூடாது, யோவ் அறிவு இருக்கா சாரோட வண்டி நிறுத்தற எடத்துல நின்னுகிட்டு இருக்கே நவுருய் யான்னு மிரட்டல் வாய்ஸ் பட்டைய கிளப்புறா மாதிரி அம்புட்டு பந்தா வளையத்துக்குள்ளே இருப்பாங்க..

பைல்ன்னு டேபிளுக்கு வராதவரைக்கும் இந்த ஆபிசர்ஸ் அதிகாரம், வீரம் எல்லாமே காமெடிதான்

ஒரு வரியில சொன்னா, பொதுவா நாம யாரு வம்பு தும்புக்கும் போறதில்லன்னு பீதியில வடிவேலு சொல்லுவாரே, அந்த வடிவேலுகளை நீங்க பல கவர் மெண்ட் ஆபிஸ்கள்ல கண்குளிர தரிசிக்கலாம்..

அப்போ பட்டைய கௌப்புற இந்த ஸ்ட்ரிட் ஆபிசர்ஸ்.? எல்லா மசாலா சினிமாவுல பார்க்க முடிகிற அந்த ஆபிசர்ஸ், எப்பவாவது அபூர்வமாத்தான் நேர்ல பாக்க முடியும்..

-ஏழுமலை வெங்கடேசன்
மூத்த பத்திரிகையாளர்

SUPPORT NEWSBANK
shares