d tags of your site:
Thu. Feb 20- 2020

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீயை தாக்கிய புகாரில் கணவர் ஈஸ்வர் கைது

Share This News:

கல்யாணப் பரிசு உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே அறிமுகமானவர் ஜெயஸ்ரீ. இவர் சீரியல் நடிகர் ஈஸ்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இதில், ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து ஈஸ்வர் கடன் வாங்கியதாக தெரிகிறது.அவரால் கடனை திருப்பி செலுத்தி பத்திரத்தை மீட்க முடியவில்லை.

இது தொடர்பாக கணவன் மனைவி இருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது,அப்போது ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும், சின்னத்திரை நடிகை ஒருவரிடமும் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை தன் கணவர் கொடுமைபடுத்தி வருவதாகவும் ஜெயஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார்

இந்நிலையில் ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திராவை போலீசார் கைது செய்தனர்.பின்னர் சந்திராவை போலீசார் ஜாமினில் விடுவித்தனர். ஈஸ்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் வழக்கம் போல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SUPPORT NEWSBANK
shares