d tags of your site:
Mon. Jul 22- 2019

சென்னை லிடியன் நாதஸ்வரம் சிகாகோவில் நடைபெறும் 10-ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு

Share This News:

தமிழகம் வாழ்த்திய இசையால் உலகை வென்ற 60 நாடுகளின் நடுவர்களால் உலகின் சிறந்த திறமைசாலி பட்டம் பெற்ற

சென்னை லிடியன் நாதஸ்வரம் சிகாகோவில் நடைபெறும் 10-ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு

ஒரு மில்லியன் அமெரிக்கா டாலர்களை, இந்திய மதிப்பில் ரூ.7 கோடியைப் பரிசாக பெற்ற சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் இசைமேதை லிடியன் நாதஸ்வரம் சிகாகோவில் தற்போது நடைபெற்று வரும் 10-ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்….

அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் சிறந்த திறமையாளர்களுக்கான போட்டியில் முதலிடம்பெற்று இந்திய மண்ணுக்குப் பெருமை தேடிக்கொடுத்திருந்த தமிழகத்தின் இளம் இசை மேதை லிடியன் நாதஸ்வரத்தை உலகமே வியந்து பாராட்டி வாழ்த்தியது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு இசைத்துறையில் இந்தியாவுக்கு சர்வதேச ரீதியில் புகழை பெற்றுக்கொடுத்தவர் லிடியன்.

The World’s Best என்ற அமெரிக்க நாட்டின் பல்துறை இசை வித்தக நிகழ்ச்சியில் தனி நபர் பிரிவில் தன் அசாத்திய பியானோ வாசிப்புத் திறனால் நடுவர்களையும், வந்திருந்த இசை வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தி இறுதிச் சுற்றில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசினை வென்று சாதனை படைத்திருந்தார். இது உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் சாதனையாளர்கள் அரங்கேறும் போட்டிக் களமாகும்.

லிடியன் நாதஸ்வரம் இதற்கு முந்திய பல சுற்றுகளை வெற்றிகரமாகத் தன்னுடைய இசைத் திறமையால் கையகப்படுத்தி சாம்பியன் பிரிவில் நுழைந்த போது ஹாலிவூட் பிரபலங்களோடு, இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற இசைப் புயல் ரஹ்மானின் ஆச்சரியம் கலந்த பாராட்டையும் பெற்றார்.

லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷனின் வாரிசு. இவரின் சகோதரி அமிர்தவர்ஷிணியும் வாத்திய வாசிப்பில் அசாத்தியத் திறன் கொண்டவர். தன் பிள்ளைகளை இசைக்காகவே அர்ப்பணித்து அவர்களின் பள்ளி வாழ்க்கை நேரத்தையும் அதற்காகவே முழுமையாக மாற்றிக் கொண்டதன் அறுவடையாக இந்த வெற்றி விளங்கியது.

லிடியன் நாதஸ்வரம் தமது குருவாக 118 ஆண்டு நிரம்பிய Madras Musical Association Choir இன் இசையமைப்பாளர் அகஸ்டின் பால்-ஐக் கொண்டு தன் இசைத் திறனை மேம்படுத்தினார்.

அமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் ( The World’s Best) என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். தன்னுடைய அசாத்திய திறமையால் பியானோவை வாசித்து உலக அரங்கையே அதிரச் செய்தார். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் பல சாதனைகளைச் செய்தார் லிடியன்.

1900-ஆம் ஆண்டில் ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை சராசரியாக வாசிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அனைவரையும் வாய்பிளக்கச் செய்தார் லிடியன். அதைப்பார்த்து அசந்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன், தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தது என ட்வீட் செய்ய அந்த வீடியோ உலகம் முழுவதும் பரவியது.அப்போது ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் சிறுவன் லிடியனுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை...  "காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி'' - கண்ணதாசனும் வாலியும்

ஒரு கையால் மிஷன் இம்பாசிபில் தீம் மியூசிக் வாசித்துக்கொண்டே மறு கையால் ஹாரிபாட்டர் தீம் மியூசிக்கை வாசிப்பது, கண்களைக் கட்டிக்கொண்டு பியோனா இசை, கைகளைப் பின்பக்கமாகத் திருப்பியே பியோனா வாசிப்பது என்று லிடியனின் சாகசங்கள் தி வேல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியை அலங்கரித்தது.

இந்நிலையில் கடைசிச் சுற்றுவரை சென்ற லிடியன், தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டத்தை இறுதியில் தட்டிச்சென்றார். பட்டத்துடன் அவருக்கு பரிசாக ரூ.7 கோடி ரொக்கமும் வழங்கப்பட்டது. அமெரிக்காவரை சென்று இந்திய, தமிழகப் பெருமையை உலகறியச் செய்த லிடியன் இப்போது நம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்துவது இன்னும் கூடுதல் பெருமை இல்லையா நமக்கு?

-பாண்டியன் சுந்தரம்

#Lidian #tamil #america

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares