d tags of your site:
Mon. Jul 22- 2019
Share This News:

லேட்டஸ்ட்டா நேத்து சென்னை குன்றத்தூர் பக்கம் நடந்த ஒரு ”லவ்” பரிதாபம்..

பொண்ணுக்கு வயசு 18…பையனுக்கு 19. அதாவது காலேஜ்ல பர்ஸ்ட் இல்லைன்னா செகண்ட் இயர் படிக்கிற வயசு. அவன் மேல தீராக்காதல். 21 வயதுக்கு முன்னாடி சட்டப்படி ஒரு பையன் கல்யாணம் முடியுமா? நமக்கு தெரியல. அதுக்குன்னே இருக்கிற சட்டமேதை சமூக போராளிகளுக்குத்தான் தெரியும்..

19 வயசுல படிக்க துப்பு இல்லைன்னா கல்யாண வயசு வர்றவரைக்கும் சினிமாவுல காட்டுற ஹீரோங்க மாதிரி, வண்டி இழுத்தோ மூட்டை தூக்கியோ சம்பா திக்கிற யோக்கியதையாவது இருக்கணும். எதுவும் இல்லை போல.

இப்பேர்பட்டவனை நம்பி பெற்றோரை எதிர்த்துகிட்டு 18 வயசு பொண்ணு, காதலன் வீட்ல வந்து இரண்டு மாசமா தங்குது. திடீர்னு நேத்து வீட்லயே தூக்குல தொங்கிடிச்சி..

பையனை தூக்கிட்டு போய் போலீஸ் விசாரிச்சதுல அவன் வேலைக்கு போகாம குடிச்சிட்டு பொண்ணுகூட சதா சண்டைபோடறதும் அடிச்சி உதைக்குறதுமா இருந்திருக்கான். அதனாலதான் பொண்ணு தூக்கு மாட்டிகிச்சின்ற விஷயம் தெரியவந்திருக்கு..

ஆனா பொண்ணோட பெற்றோர், பொண்ணை அந்த பையன் அடிச்சிதான் கொன்னுருக்கான்னு போலீஸ் கிட்ட கதறிகிட்டு இருக்காங்க..

காதல், திருமணம் அப்புறம் அதைத்தாண்டிய யதார்த் தமான வாழ்க்கை இதுபோன்றவற்றில் புரிதல் இல்லா மல் முடிவெடுத்ததன் விளைவு.? வாழவேண் டிய பொண்ணு 18 வயசிலேயே இப்போ உயிரோட இல்லை..

ஆணோ பெண்ணோ, காதலிப்பது தப்பில்லை. ஆனா கல்யாணத்துக்கும் அதற்குப்பிறகும் நெடும் பயணம் வருகிற அளவுக்கு எதிராளி யோக்கியமான்னு ஆராய்ந்து பார்க்கறது ரொம்ப அவசியம். கட்டாயம், கட்டாயம். கட்டாயமோ கட்டாயம்..

அதே சமயத்துல பேரண்ட்ஸ்க்கு அடிக்கடி சொல் வோம் . பொண்ணு லவ் பன்ற பையன் நாலு பேர் மதிக்கும் அளவுக்கு நல்லவனா, சம்பாதிக்கும் திறன் உள்ளவனா இருந்தா வீம்பு பிடிக்காம சாதி மதம் பார்க்காம கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லுங்க..

பையன் தறுதலை, வேலைவெட்டியில்லாத குடிகா ரன்ற லெவல்ல இருந்து, எவ்ளோ எடுத்து சொல்லியும் கேக்காம பொண்ணு கம்பிய நீட்டினா, ஒரு சொம்பு தண்ணிய எடுத்து தலைமேல் ஊத்திகிட்டு ஒழிஞ்சது ஒரு பீடைன்னு போய்க்கிட்டே இருப்பது உத்தமம்.

ஓடிப்போனவங்களோட காதல் உன்னதமானதுன்னா எந்த லெவலுக்கும் தாக்கு பிடிக்கும். டூபாக்கூர் காதல்னா, பொண்ணு கொண்டு வந்த நகையிலேயோ பணத்துலேயோ ரூம் போட்டு மூணு வேளை மூக்கை பிடிக்க தின்னுப்புட்டு ஆறுவேளை கட்டில்ல முணகி கிட்டு இருக்கும். கைக்காசு தீர்ந்த பிறகுதான் கூட்டி யாந்தவன் யோக்கியதை பொண்ணுக்கு தெரியவரும்.

தாலி வாங்கறதுக்கு முன்னாடியே யதார்த்த வாழ்க் கையை மனசுல வெச்சு பொண்ணுங்க டிரையல்
பார்த்தா, லவ்வர் பாய்ஸ் ஓடிப்போயிடுவானுங்க..

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕓 1-நிமிட வாசிப்பு-NEWS TRAILER

காதலிக்கறதுக்கு எதுவும் தேவையில்லை.ஆனா கல்யாணம் கட்டிகிட்டு வாழறதுக்கு பல விஷயங்கள் தேவை..

-ஏழுமலை வெங்கடேசன்

#love #marreage #sucide

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares