d tags of your site:
Thu. Feb 20- 2020

ஹைதராபாத் எண்கவுண்டர் – சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி -நடிகை நயன்தாரா

Share This News:

ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் நேற்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்கள் சுட முயன்றதால், தற்காப்பிற்காக போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்து ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இதற்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா இதுபற்றி கருத்து தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில் ‘பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நமது கடமை ஆகும்.

பெண்கள் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக, காவல்துறையினர் தீர்க்கமான பதில் அளித்துள்ளனர். சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை.

இது நியாயமான மனிதநேய மிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்” என நயந்தாரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

SUPPORT NEWSBANK
shares