d tags of your site:
Tue. Sep 17- 2019

சிதம்பரம் அவர்களே,உங்கள் கொடுமையான சட்டங்களால்..அப்பாவி முஸ்லீம் வாலிபர்கள் வருடக்கணக்கில் சிறையில்

A Muslim man waves an Indian flag during a march to celebrate India’s Independence Day in Ahmedabad, India, August 15, 2016. REUTERS/Amit Dave - RTX2KWWX

Share This News:

2004-ல் இருந்து 2014 வரை அதிகாரமிக்க பதவிகளில் இருந்த செட்டி நாட்டு அரசர் சிதம்பரம் அவர்களே..!2002 குஜராத் கலவர குற்றவாளிகளை நீங்கள் உண்மையான மனதுடன் தண்டித்து இருந்தால், இன்று நாடு இவ்வளவு மோசமான அவல நிலைக்கு போய் இருக்காது.

”பாபர் மஸ்ஜித் இடிப்பில் 68 பேர் குற்றவாளிகள்” என்ற ஜஸ்டிஸ் லிபர்ஹான் விசாரணை கமிஷனின் அறிக்கை உள்துறை அமைச்சர் என்ற முறையில் உங்களிடம் தானே கொடுக்கப்பட்டது..?

அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் ஊடகங்களிடம் பேசிய தாங்கள்,”குற்றவாளிகள் 68 பேரும் எப்போது கைதாவார்கள்?” என ஊடகவியலாளர்கள் கேட்டபோது…

“குற்றவாளிகள் என்றுதான் கமிஷன் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது, கைது செய்யச்சொல்லி எந்த ஆணையும் அதில் இல்லையே, ஆகவே கைது செய்ய இயலாது”என்று நீங்கள் சொன்ன அந்த பதில் எங்கள் காதுகளில் இன்னமும் ஒளித்துக்கொண்டே இருக்கிறது.

17 வருஷம் கழித்து,9 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் விசாரணை நடந்து அளிக்கப்பட்ட அந்த அறிக்கையை பைசாவுக்கு பிரயோஜனம் இன்றி குப்பையில் வீசப்பட்டதற்கு நீங்கள்தானே முக்கிய காரணமாக இருந்தீர்கள்..?

ஒரு முறை அன்னை இந்திரா காந்தி அவர்களின் விருந்தினராக இந்தியா வந்திருந்த “எல்லை காந்தி” கான் அப்துல் கபார் கான், செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்வி கேட்டார்.

இன்று வரை அந்த கேள்விக்கு பதில் இல்லை

”சுதந்திரத்துக்கு பின் நடந்த மத கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படும் பொழுது , கொலைகார குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்து இருக்கீர்களா”என்பதே அந்த கேள்வி.

மதிப்பிற்குரிய சிதம்பரம் அய்யா அவர்களே,உங்களால் கொண்டுவரப்பட்ட கொடுமையான சட்டங்களால் ,அப்பாவி முஸ்லீம் வாலிபர்கள், வருடக்கணக்கில் சிறையில் பட்ட சித்ரவதைகளை பற்றி முதல் வகுப்பு அறையில் (சிறையில்) ஓய்வாக ஒரு சில நாட்கள் இருக்க போகும் நீங்கள் நினைத்து பாருங்கள்.உங்களின் அதிகாரத்தால் அப்பாவிகள் சித்ரவதை அனுபவித்து இருந்தால்,

அவர்களையும் நினைத்து பாருங்கள் சில நிமிடங்கள்.

-வரிகொடுத்தான்

SUPPORT NEWSBANK
shares