d tags of your site:
Mon. Jul 22- 2019

செக் மோசடி வழக்கு; சரத்-ராதிகா தம்பதியர் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது

Share This News:

செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று நிராகரிக்கப்பட்டு உள்ளது.

திரைப்படம் தயாரிப்பதற்காகச் சென்னையைச் சேர்ந்த ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனமும் அதன் பங்குதாரர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ரூ.2 கோடிக்கு மேல் பணம் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையில் ஜூன் 28-ஆம் தேதி ராதிகா , சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஜோசப் ஆகிய மூவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் சரத்குமார், ராதிகா மற்றும் லிஸ்டின் ஜோசெப் மேல்முறையீடு செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனு எண் 005358 – 005364 / 2019-இன் கீழ் ஜூன் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு ஜூன் 27ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டது.

இன்று நீதிபதிகள் சஞ்சய் கிசான் கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு இந்த மனுவை நிராகரித்துள்ளது.

#newsbank,in

#sarathkumar #rathika

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕖 1-நிமிட வாசிப்பு- NEWS BRIEF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares