d tags of your site:
Mon. Jul 22- 2019

சட்டசபை செய்திகள்: ஏழுபேர் விடுதலை விவகாரமும்..விவாதமும்

Share This News:

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று, சட்டத்துறை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், 7 பேர் விடுதலையில் மாநில ஆளுநருக்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநரிடம் அளித்து 9 மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

தமிழக அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இனி ஆளுநர் தான் முடிவெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கருணாநிதி முதல்வராக இருந்த போதும் இதே போல் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போடப்பட்டது.

அப்போதும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய , எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், அனைவரையும் விடுதலை செய்யலாம் என்ற வாய்ப்பு நீதிமன்றத்தால் உங்கள் ஆட்சிக்கு தான் வழங்கப்பட்டது.

எங்களுக்கு அதுபோல ஒரு வாய்ப்பு அமைந்திருந்தால் நாங்கள் அவர்களை விடுதலை செய்திருப்போம் உங்களை போல் தீர்மானம் போட்டு சும்மா இருக்க மாட்டோம் என கூறினார்.

பின்னர் பேசிய முதல்வர், திமுக ஆட்சியில் போட்ட தீர்மானத்தில் எப்படி நளினியை மட்டும் விடுதலை செய்யும் வகையில் தீர்மானம் போட்டீர்கள், சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை நீங்கள் முறையாக செய்திருக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் உடனடியாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம் என்றார்.

பின்னர் பேசிய துரைமுருகன், தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி விட்டு சும்மா இருக்க கூடாது. அதோடு ஆளுநரை தனிப்பட்ட முறையில் நீங்கள் சந்தித்து வலியுறுத்தவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால் திமுகவின் செயல்பாடு காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் காலம் தாழ்தியதிலேயே தெரிந்தது என கூறினார்.

#tamilnadu #assemblynews #chiefminister

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares