d tags of your site:
Mon. Jul 22- 2019

சட்டசபை செய்தி: முதல்வர் எடப்பாடியார் ஆண்ட்ராய்டு போனை போன்றவர்-ஐ.எஸ்.இன்பதுரை

Share This News:

மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை பேசியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதில் சிறந்து மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் 2011 முதல் 2018 வரை அரசு பணிகளில் 89,857 பேருக்கும், ஜனவரி 2018 முதல் மார்ச் மாதம் வரை தனியார் நிறுவனங்களில் 85,756 பேருக்கு பணி அரசின் மூலம் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்க புதிய முயற்சி அரசு மேற்கொண்டுள்ளதாக கொள்கை விளக்கு குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

எனது ராதாபுரம் தொகுதியில் தான் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி அணு கழிவு மையம் அமைக்க உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் மக்களின் அச்சத்தை போக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். என அரசை கேட்டுக் கொள்கிறேன்

எனது தொகுதியில் 9 மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது, பக்கத்து மாவட்டமான கன்னியாகுமரி மீனவர்கள் எனது தொகுதி மீனவர்களின் வலைகளை அறுத்துவிடுகின்றனர்.

கடந்த வாரம் ராதாபுரம் தொகுதி மீனவர் ஒருவர் காணமால் போய்விட்டார். இன்று காலை அவரது உடல் கடலில் மிதத்துந்துள்ளது. ஆகவே அந்த மீனவ குடும்பத்திற்கு நிவாரண நிதி அரசு வழங்க வேண்டும்.

மேலும் 1983ம் ஆண்டு எம்ஜிஆர் கொண்டு வந்த தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தின்படி விசைபடகுகள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும், 8 மைல் அப்பால் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்றுள்ளது. இதனை கடுமையாக்க அரசு முன்வரவேண்டும்.

எனது தொகுதி அறிவுகரையில் சிறு மீன்பிடி துறைமுகம், கூடுதாலையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார்:-

உறுப்பினர் குறிப்பிட்டுள்ள சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உயிரிழந்த மீனவ குடும்பத்திற்கு மீனவ குடும்ப நில நிதி மூலம் 2 லட்சமும், மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் 2 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

மேலும் உறுப்பினர் குறிப்பிட்டுள்ள பகுதியில் சிறு மீன்பிடி துறை முகம் இந்தாண்டு தேசிய நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் விசைபடகுகள் மீன்பிடிப்பதை ஒழுங்குபடுத்த 1983 எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.எஸ்.இன்பதுரை:-

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு கொடைவிழா நடைபெற்று வருகிறது. 10மணிக்கு மேல் இறைவழிபாடுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறைவழிப்பாட்டில் தடைவிதிப்பதை அரசு நீக்க வேண்டும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை...  சட்டசபை செய்தி:சேலம் உருக்காலை விவகாரம் முதல்வர்-அமைச்சர்கள்-ஸ்டாலின் விவாதம்

நீதிமன்றத்தில் தினசரி நடைபெறும் வழக்கு தொடர்பாக புத்தகமாக வெளியிடுவது வழக்கம். அதிக செலவினம் காரணமாகவும், நிதி பற்றாக்குறை காரணமாகவும் இதை நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆகவே போதிய நிதியை அரசு வழங்கி நீதிதுறை காக்க வேண்டும்.

தற்போது சமூக வளைதளங்கள் குற்ற செயல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும், யூடியூப், பேஸ்புக் போன்றவற்றின் சர்வர் அமெரிக்காவில் உள்ளதால், முழுமையாக சமூக வளைதள குற்றங்களை தடுக்க முடியவில்லை, ஆகவே தமிழ்நாட்டில் இதற்கான சர்வர்களை அமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

முதல்வர் எடப்பாடியார் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு போனை போன்றவர்,

எளியவர் கையிலும் தவழக்கூடிய ஆன்ட்ராய்டு போனை போன்றவர், பணக்காரர்கள் பாக்கெட்டில் தவழும் ஐ போன் கிடையாது.

எளிமையாக அணுகக்கூடியவர், கடைக்கோடி மக்களும் எளிதில் சந்தித்து பேச முடியும். அதே போன்று மிகவேகமாக செயல்பட கூடியவர். திட்டத்தை போட்டு, அந்த திட்டத்தை செயல்படுத்த சட்டம் போட்டு, அந்த சட்ட நடைபெறமுறை குழு அமைத்து, அது கடைகோடி மக்களும் சொன்றடைய நேரில் சென்று ஆய்வு செய்பவர் தான் முதல்வர் எடப்பாடியார்.

அதே போன்று நீண்ட நேரம் தாக்கு பிடிக்கும் பேட்டரி போன்றவர், எப்படி என்று ஆராய்ந்து பார்க்கும் போது, 2 நாளில் சென்றுவிடுவார்,

2 மாதத்தில் சென்றுவிடுவார் என சொன்னவர்கள் மத்தியில் நீண்ட நாள் ஆட்சி செய்து தனது திறனை காட்டியுள்ளார்.என்று ஐ.எஸ்.இன்பதுரை பேசினார்

#tamilnadu #assemblynews #isinbadurai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares