d tags of your site:
Mon. Jul 22- 2019

சட்டமன்ற செய்தி: எம்.எல்.ஏக்கள் கேள்வியும்-அமைச்சர்கள் பதிலும்..

Share This News:

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, குன்றத்தூர், மாங்காடு மற்றும் கொளப்பாக்கம் ஆகிய வருவாய் குறுவட்டங்களை இணைந்து புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ பழனி கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ பழனி பேசுகையில்: குன்றத்தூர், மாங்காடு மற்றும் கொளப்பாக்கம் ஆகிய வருவாய் குறுவட்டங்களை இணைந்து புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

23 கிராமங்களை சேர்ந்த 3 லட்சத்து 47 ஆயிரம் மக்கள் உள்ளனர். இந்த பகுதிகள் மக்கள் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆகவே மக்களின் இன்னல் போக்க புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்:

அரசாணை எண் 70 வருவாய்துறை நாள் 10.2.2016படி ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சீரமைக்கப்பட்டு, அதிலுள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு குறுவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட பல்லாவரம் வட்டத்தில் சேர்க்கப்பட்டது. மேலும் மாங்காடு குறுவட்டத்திலிருந்து 13 கிராமங்களைக் கொண்டு புதிய கொளப்பாக்கம் குறுவட்டம் உருவாக்கி அதனை ஆலந்தூர் வட்டத்தில் சேர்த்து ஆணையிடப்பட்டது.

எனவே அரசணை எண் 279 வருவாய்துறை நாள் 9.6.2003ன் படி நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களின் அடிப்படையிலி ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாங்காடு, கொளப்பாக்கம் மற்றும் குன்றத்தூர் ஆகிய மூன்று வருவாய் குறுவட்டங்களை ஒன்றிணைத்து புதிய வருவாய் வட்டம் உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றார்.


விருத்தாச்சலத்தில் கால்பந்து அகாடமி அமைக்க அரசு முன்வர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபை கேள்விநேரத்தின் போது விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் பேசுகையில்: கடலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கால்பந்து விளையாட்டு வீரர்கள் அதிகளவில் உள்ளனர். என்னுடைய தொகுதிகளிலும் அதிக அளவு கால்பந்து வீரர்கள் உள்ளனர்.

ஆகவே கால்பந்து அகாடமி அமைத்து தர அரசு முன்வர வேண்டும். மேலும் எனது தொகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் அமர்வதற்கு கட்டிடம் இல்லாமல் உள்ளது. ஆகவே இந்த பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தில் கூடுதல் கட்டிடம் கட்டி தர முன் வர வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

உறுப்பினர் குறிப்பிட்டுள்ள தொகுதியில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் அதிகளவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று என்எல்சி நிறுவனத்துடன் பேசியுள்ளேன்.

ஆகவே விரைவில் அந்த பகுதியில் கால்பந்து அகாடமி அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். மேலும் நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை, ஆய்வகங்கள், கழிப்பறைகள், சுற்றுசுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை...  அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் தண்டனை வழங்க சட்ட திருத்தம்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

அந்த வகையில் உறுப்பினர் குறிப்பிட்டுள்ள பள்ளிகளுக்கு இந்தாண்டு நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் கட்டிடம் கட்டி தரப்படும்.


1912 எனும் இலவச தொலைபேசி எண் மூலம் பெறப்படும் புகார் உடனுக்குடன் தீர்வு காணப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது செம்மலை எம்எல்ஏ பேசுகையில்: பெரிய டிரான்பார்களில் 500 முதல் 600 மின் இணைப்புகள் கொடுக்கப்படுவதால், மின்தடை ஏற்படும் போது மொத்த நுகர்வோர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகவே பெரிய டிரான்ஸ்பார்கள் பதிலாக சிறிய வகை டிரான்பார்கள் அமைத்தால், இது போன்ற பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மேலும் 1912 எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை அனைத்து மாவட்ட மின் பொறியாளர் அலுவலகத்திலும் கொண்டு வர வேண்டும்.

அமைச்சர் தங்கமணி:

உறுப்பினர் குறிப்பிட்டுள்ளது போன்று சிறிய வகை டிரான்பார்களையும் தேவையான இடங்களில் அமைத்து வருகிறோம். உறுப்பினர் குறிப்பிட்டுள்ளது போன்று மின்தடை ஏற்பட்டால், 30 நிமிடங்களில் வேறு வழியில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

ஆகவே சிறிய வகை டிரான்பார்கள் நிதிநிலைக்கு ஏற்ப பிற பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கும். 1912 எண் அறிமுகப்படுத்தப்பட்டு அது பொதுமக்களின் புகார்கள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது.

அது போன்று மின் பொறியாளர்கள் அலுவலகத்தில் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

#tamilnadu #assemblynews #mla #minister

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares