d tags of your site:
Mon. Jul 22- 2019

சட்டசபை செய்தி: (ஜூலை-11) எம்.எல்.ஏக்கள் கேள்வியும்-அமைச்சர்கள் பதிலும்..

Share This News:

சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிபடியாக பாடத்திட்டத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன் பேசுகையில்:

கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை தனியாக பிரிப்பதற்காக மார்ஷல் நேசமணி பல்வேறு போராட்டங்களை நடத்தி, அதன்படி 1.1.1956ம் ஆண்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

நேசமணியின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமா என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன்:

தேசிய தலைவர் தியாகத்தை போற்று வகையில் அவர்களுது வாழ்க்கை வரலாற்று பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு படிபடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நேசமணியின் வாழ்க்கை வரலாறும் அரசு பாடதிட்டத்தில் இடம் பெறும்.


கடந்த 8 ஆண்டுகளில் 507 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ ரவி பேசுகையில்:

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் விவசாயிகள் பம்பு செட்டுகள், அப்பகுதி கிராம மக்கள் குறைந்த அளவு மின்அழுத்ததால அவதிபடுவதாக என்னை சந்திக்கும் போது எல்லாம் முறையீடுகிறார்கள்.

ஆகவே அப்பகுதியில் 110 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்ற அமைத்து தர வேண்டும்.

அதே போன்று எனது தொகுதியில் நெசவாளர்கள், விவசாயிகள் அதிகம் வசிக்ககூடிய பகுதியாக உள்ளது. அவர்களுக்கு சீரான மின்சாரம் வழங்க அப்பகுதியில் 33 கேவி திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அதனை விரைந்து முடித்து தர வேண்டும்.

அமைச்சர் தங்கமணி:

உறுப்பினர் குறிப்பிட்டுள்ள பகுதியில் குறைந்த மின் அழுத்தம் உள்ளதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக ஆய்வு செய்தத்தில் போதுமான மின் பளு இருப்பதால், புதிய மின்மாற்றி அமைக்க வேண்டிய தேவை எழுவில்லை.

இருந்தபோதிலும் எதிர்காலத்தில் மின் தேவை கருத்தில் கொண்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 8 ஆண்டுகளில் 507 புதிய துணை மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியார் ஆட்சியில் 179 புதிய துணை மின்நிலையங்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


பண்ருட்டி தொகுதி அரசு மருத்துவ கல்லூரி அமைத்து தர அரசு முன்வர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ சத்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பேசுகையில்:

எனது தொகுதியிலிருந்து 30 கி.மீ தொலைவில் விழப்புரம், கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் என பக்கத்து தொகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. 12-ம் வகுப்பு மாணவிகள் மேற்படிப்பை தொடராமல் பாதியில் படிப்பை கைவிடும் நிலை ஏற்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை...  ரசகுல்லா யாருக்குச் சொந்தம் என்று சண்டை போட்ட இரண்டு மாநிலங்கள்

ஆகவே மாவட்ட வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இடம் உள்ளது, அங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும். மேலும் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கவும் அரசு முன் வர வேண்டும்.

அமைச்சர் கே.பி.அன்பழகம்: உறுப்பினர் தொகுதியில் அடங்கியுள்ள கடலூர் மாவட்டத்தில் 4 அரசு கல்லூரி, 1 அரசு உதவி பெறும் கல்லூரி, 1 பல்கலை உறுப்பு கல்லூரி, 6 தனியார் கல்லூரிகள் உள்ளன. இதில் ஓப்படைக்கப்பட்ட இடங்களில் சில கல்லூரிகளில் காலியாக உள்ளது.

ஆகவே எதிர்வரும் காலத்தில் தேவைக்கு ஏற்ப முதல்வர் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மருத்துவகல்லூரி தொடர்பாக முதல்வர் பணிவுடன் பரிசீலினை மேற்கொள்வார். என்றார்.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பேசுகையில்:

செய்யாறு தொகுதி தூசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கூடுதலாக புதிய நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்.

மேலும் வெண்பாக்கம் ஊராட்சியில் வேளாண் மக்களின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் காமராஜ்:

உறுப்பினர் குறிப்பிட்டுள்ள தூசி தொகுதியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் 35 லட்சம் செலவில் கட்டிட தரப்படும். மேலும் வெம்பாக்கம் ஊராட்சியில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் தேவையின் அடிப்படையில் அமைத்து தரப்படும்.

டெல்டா மாவட்ட தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 360 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிட தரப்பட்டுள்ளது. உறுப்பினர் சம்பந்தப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 நேரடி நெல்கொள்முதல் நிலையஙகள் 1 கோடியே 30 லட்சம் செலவில் கட்டி தரப்பட்டுள்ளது.

எம்எல்ஏ தூசி கே.மோகன்:

முதல்வர் ஏடிஎம் மையம் போன்றவர் 24 மணி நேரம் செயல்பட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.

அவருக்கு துணையாக துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் 7500 பேரும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் பேரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு மத்திய அரசின் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போன்று பணி நிரந்தரம் செய்து வேண்டும்.

அமைச்சர் காமராஜ்:

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ், ஊக்கதொகை, பொங்கல் பரிசு உள்ளிட்டவை மாநில அரசு சார்பாக வழங்கப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை...  காஞ்சிபுரம்: அத்திவரதரை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்

அதே போன்று 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டநிலையில் , நாளை முதல் 29 சதவீதம் ஊதிய உயர்வு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

#tamilnadu #assemblynews #mla #ministers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares