d tags of your site:
Mon. Jul 22- 2019

சட்டசபை செய்திகள்: நீட்தேர்வு -ஆளும்கட்சியும்.எதிர்கட்சியும் நீங்க தான்..இல்ல, நீங்க தான்..என ஒருவருகொருவர் குற்றச்சாட்டு

Share This News:

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பேரவையில் திமுக,அதிமுக இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான், நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொண்டு வருகிறது என முதல்வர் விளக்கம் அளித்தார்.

இதனை ஏற்க மறுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் கேள்வி நேரத்தில்…

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்:

நீட் தேர்வு தொடர்பாக 2 மசோதாக்கள் அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு, அது கடந்த 22.9.2017 அன்று நிராகரிக்கப்பட்டதாக சட்டதுறை செயலாளருக்கு குடியரசு தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதனை தமிழக அரசு, சட்டதுறை அமைச்சரும் மறைத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த விவாதத்தில் மறைத்துள்ளார்.

19 மாதகாலங்கள் இந்த கடிதம் கிடைக்கப் பெற்றதை இதுவரை பேரவையிலும், மக்களிடம் தெரிவிக்காமல் கால தாழ்த்தி, மீண்டும் இந்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக மக்களவை தேர்தல் அறிக்கையில் கூட நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என தெரிவித்துள்ளீர்கள்.

இதனால் மக்களையும் ஏமாற்றி உள்ளீர்கள். நாட்டு மக்களுக்கு பச்சை துரோகம் செய்து விட்டது. ஆகவே தார்மீக பொறுப்பேற்று சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம் :

நீட் தேர்வு தொடர்பாக 22.9.2017 அன்று குடியரசு தலைவரிடம் இருந்து வந்த கடிதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்கள் முன்பு பேரவையில் தெளிவாக குறிப்பிட்டேன்.

மசோதா எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என விளக்கம் அளிக்க வேண்டும் என காலதாழ்த்தாமல் உடனடியாக தமிழக அரசு சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது.

தமிழக அரசின் இந்த கடிதத்திற்கு இதுவரை எந்த விளக்கம் அளித்து எந்த கடிதமும் வரவில்லை.

ஆகவே இந்த மசோதாவை மீண்டும் பேரவையில் தாக்கல் செய்வதில்லை எந்த பிரச்னையும் இல்லை.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஒரு இமெயிலை காட்டி மத்திய அரசின் வழக்கறிஞர் மசோதாக்கள் நிரகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இமெயில் தொடர்பான கடிதம் கூட இந்த நேரம் வரை தமிழக அரசுக்கு வரவில்லை.

எதிர்கட்சி தலைவர் எந்த சட்டவல்லுநரையும் கலந்து ஆலோசித்து கொள்ளலாம். நான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். அது போன்று நீங்கள் ராஜினாமா செய்ய தயாரா.

இதனை தொடர்ந்து அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்:

அதிகம் வாசிக்கப்பட்டவை...  11-எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு:ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விரைவில் விசாரணை

இந்த கடிதம் 2017-ம் ஆண்டு கிடைக்க பெற்று, இதற்கு முன்பு நடந்த பேரவை கூட்டத்தில் கூட கூறாமல், 2 தினங்களுக்கு முன்பு தெரிவித்து, பொதுமக்கள் அரசு ஏமாற்றி உள்ளது.

இது மாணவர்கள் பிரச்னை அமைச்சர் ஏட்டி போட்டி பேசுவது சரியில்லை. இது பொறுப்பற்ற செயல்.

அமைச்சர் சி.வி.சண்முகம் :

மசோதா நிரகரிக்கப்பட்டு விட்டது என மத்திய அரசு தெரிவித்து இருந்தால் அதனை தெரிவித்து இருந்து இருப்போம். ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கும் நிராகரிக்கப்பட்டிருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

ஆகவே எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாக வழக்கை அரசு சந்தித்து வருகிறது.

சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்:

சட்டத்துறை அமைச்சர் சொன்னது போல 2017 மத்திய அரசு மசோதா தொடர்பாக அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் கேட்டு உடனடியாக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பேரவையில் தெரிவிக்க வில்லை என எதிர்கட்சி தலைவர் கூறியிருக்கிறார். ஆனால் ஜூன் மாதம் 2018ம் ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் பேசும் போது, நான் இது தொடர்பாக பேசியிருப்பது பேரவை குறிப்பில் உள்ளது.

இந்த விவகாரத்தை திசை திருப்பவே இது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்:

பல முறை இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மாறுப்பட்ட அமைச்சர்கள் கூறிய கருத்துகள் ஏற்புடையதாக இல்லாத்தால் கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்கிறோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

நீட் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அறிவி்பபாணை தான் இவ்வளவு பிரச்னைக்கு காரணமாக உள்ளது.

இது எல்லாம் ஆவணமாக உள்ளது. இதை எல்லாம் யாராலும் மறுக்க முடியாது. 2 நாட்களுக்கு முன்பு இந்த அவையில் விவாதம் நடந்த போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வில் விலக்கு பெற பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நானும் பிரதமரை பல முறை நேரில் சந்தித்தும், கடிதம் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி அழுத்தம் அளித்து வருகிறேன்.

காங் சட்டமன்ற தலைவர் ராமசாமி:

ஊழல் குற்றசாட்டில் அமைச்சர்கள் உள்ளதால் தான் இது போன்று பேசுகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

யார் ஜாமீனில் வெளிவந்து வழக்கை சந்திக்காமல் வாய்தா பெற்று வருகிறார்கள் என மக்களுக்கு தெரியும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:

நீட் தேர்வு தொடர்பாக அனிதா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் காங்கிரஸ் தான் என்பதை குற்றம்சாட்டுகிறேன்.

அதிகம் வாசிக்கப்பட்டவை...  கடன்களை வசூலிக்க அடியாட்களை அனுப்பும் அதிகாரம் வங்கிகளுக்கு இல்லை -மத்திய அமைச்சர்

சவாலை ஏற்க தயார்

நீட் மசோதா தொடர்பாக என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். அதனை ஏற்று கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் நான் தவறு செய்து இருந்தால் அதற்கு முழு பொறுப்பு ஏற்கிறேன். இந்த அவையில் கடந்த 8.7.2019 அன்று நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற விவட்த்தில் தெளிவாக பேசியிருக்கிறேன்.

அது அவை குறி்ப்பில் உள்ளது. ஆகவே எதிர்கட்சி தலைவரின் கனவு காண்பது பலிக்காது. 5 ஆண்டுகள் இந்த ஆட்சி முழுமை செய்து. அடுத்தும் ஜெயலலிதா ஆட்சி தான் வரும், எதிர்கட்சி தலைவர் என்ன தண்ணீர் குடித்தாலும், கனவு காண்டாலும் பலிக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

#tamilnadu #assemblynews #neet #admk #dmk #congress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares