d tags of your site:
Mon. Jul 22- 2019

சட்டசபை செய்தி: சென்னை குடிசை இல்லா நகரமாக உருவாக்கப்படும்-ஒ.பன்னீர்செல்வம்

Share This News:

தமிழகத்தில் இதுவரை குடிசைமாற்று வாரியத்தின் முலம் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பயனாளிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சாலைகளில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டி தொடர்பாக திமுக உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது சாலைகளில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் அரசு பல முறை அறிவித்தும் இன்னும் சென்னையிலே பல பேர் சாலைகளில் வசிக்கும் நிலை உள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதலளித்த துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்: தொலைநோக்கு திட்டம் 2023 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2012 ஆண்டு வெளியிட்டு அதன்படி 15 லட்சம் குடிசை பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்ட திட்டமிட்டார். மேலும் இதற்காக 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு முடிவு செய்து, அதன் அடிப்படையில் குடிசை இல்லா நகரமாக உருவாக்க உறுதியான, தரமான வீடு கட்ட திட்டமிட்டப்பட்டது.

இன்று படிப்படியாக குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு 400 சதுரடி பரப்பளவில் இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு விரைவில் தரமான வீடுகள் கட்டித்தரப்படும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். என்றார்.

#tamilnadu #assemblynews #opannerselvam

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕓 1-நிமிட வாசிப்பு-NEWS TRAILER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares