d tags of your site:
Mon. Jul 22- 2019

பெண்கள் நகை நட்டு அணியாமல் மூலியாக நடமாடினால் அது நாட்டுக்கு நல்லதல்ல..

Share This News:

மாநகர மின்சார ரயிலில் ஒரு பெண்மணி இன்னொருவரிடம் கூறியது நம் காதிலும் விழுந்தது

சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் சிற்றுார்களிலும் கூட, பெண்களிடம் செயின் பறிப்பு குற்றங்கள் அதிகரித்த வண்ணமாக உள்ளன

. இந்த கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த தகவல்கள், என்னைப் போன்ற பெண்களுக்கு, மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

அல்லும், பகலும் அரும்பாடுபட்டு சேர்த்த நகைகளை, கழுத்தில் அணிந்து, அழகு பார்க்கக் கூட முடியாத அளவுக்கு, தமிழகத்தில் நிலைமை மோசமாக உள்ளது.

இந்த கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர், நகைகளை பறிக்கும் போது, பெண்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என, பயங்கரமாக நடந்து கொள்கின்றனர்

இந்த கொடூரர்களை கட்டுப்படுத்த, முற்றிலும் ஒழிக்க, தமிழக காவல் துறையிடம் திட்டங்கள் எதுவும் இல்லையோ என்றே தோன்றுகிறது.

இனிமேல் பெண்கள் நகை நட்டு அணியாமல் மூலியாக நடமாடும் நிலை உருவாகப்போகிறது.

அது நாட்டுக்கு அமங்கலம் ஆகும்

#tamilnadu #crime

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕗 1-நிமிட வாசிப்பு-NEWS TRAILER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares