d tags of your site:
Mon. Jul 22- 2019
Share This News:

இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் 4 வருடங்கள் உதவியாளராக நா.முத்துக்குமார் பணியாற்றினார்.

பின்னர், சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ் திரைப்பட பாடலாசிரியராக தனது பயணத்தை அடியெடுத்து வைத்தார்.

தமிழை மிக அழகாக கையாண்டு இலக்கியத் தரத்துடன் பாடல்களை எழுதுவதில் நா.முத்துக்குமார் வல்லவர்.

1,500-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியுள்ளார்.
சமகால தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனைவருடனும் கிட்டத்தட்ட பணியாற்றியுள்ள நா.முத்துக்குமார், தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக உருவெடுத்தார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம் படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

பட்டாம் பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், ஆனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம் என்கிற பல்வேறு தலைப்புகளில் கவிதை தொகுப்பு, கட்டுரை, நாவல் உள்ளிட்ட படைப்புகளை நா.முத்துக்குமார் படைத்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ என்ற பாடலுக்கும், சைவம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழகே.. அழகே எல்லாம் அழகே.. என்ற பாடலுக்காகவும் இருமுறை தேசிய விருதை நா.முத்துக்குமார் பெற்றுள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்றுள்ள அவர், சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

#today #NaMuthukumar #birthday

அதிகம் வாசிக்கப்பட்டவை...  சட்டசபை செய்தி: முதல்வர் எடப்பாடியார் ஆண்ட்ராய்டு போனை போன்றவர்-ஐ.எஸ்.இன்பதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares