d tags of your site:
Mon. Jul 22- 2019

உதயநிதிக்கு பட்டம் சூட்டும் விழா: ஆராவாரத்தில் அண்ணா அறிவாலயம்

Share This News:

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த உதயநிதி கருணாநிதியின் மறைவுக்கு பின் அரசியலிலும் களம் இறங்கினார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22-தொகுதிக்ளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலின் போது திமுக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திமுக வெற்றி பெற்றதற்கு அவரின் பிரச்சாரமும் ஒரு காரணம் எனவும், அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட வேண்டும் என திமுகவின் இளம் தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ஸ்டாலின் வெகு நாட்களாக வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட இருப்பதாக நேற்று தகவல்கள் கசிந்தன

அப்பதவியில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனும் சமீபத்தில் ராஜீனாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று அவருக்கு பதவி அளிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

#newsbank,in

#uthayanidhi #mkstalin #annaarivalayam

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕐 1-நிமிட வாசிப்பு-NEWS BRIEF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares